Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 28 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்
கிளிநொச்சி, முகமாலை மேற்குப் பகுதியில், ஜப்பானிய அரசின் நிதியதவியுடன் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில், மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் என 2,064 அபாயகரமான பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக வெடிப்பொருள் அகற்றும் நிறுவனமான டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த கால யுத்தத்தின்போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி பகுதியில் மாத்திரம் 2,012 மிதிவெடிகள், 26 வாகன எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் 26 வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடிப்பொருட்கள் என மொத்தம் 2,064 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில், கிளாலி தொடக்கம் முகமாலை வரையான பகுதிகளில் காணப்படும் அபாயகரமான பொருட்களை, பல்வேறுபட்ட தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் அகற்றி வருகின்றன.
இந்நிலையில், டாஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினால், ஜப்பானிய அரசினதும் ஜப்பானிய மக்களினதும் நிதிப் பங்களிப்புடன், முகமாலை மேற்குப் பகுதியில் கைவிடப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னரங்க காவல் நிலையங்களில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல், வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago