Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
குற்றச்செயல்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பில் அவசர அழைப்புகளை மேற்கொள்ள புதிய அலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் வவுனியாவில் நேற்று நடைபெற்றது.
வுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வவுனியா மாவட்ட பொதுமக்களுக்கு 0766224949 என்ற அலைபேசி இலக்கம், மன்னார் மாவட்ட பொதுமக்களுக்கு 0766226363 என்ற இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த இலக்கங்கங்களுக்கு தொடர்புக்கொண்டு 24 மணிநேரமும் தமிழ் மொழில் முறைப்பாடுகளையும் செய்துகொள்ளமுடியும்.
இதேவேளை, சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் சிலருக்கு மேற்படி இலக்கங்களுக்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்த அலைபேசி சிம் அட்டைகள் வழங்கப்பட்டன.
வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், மத குருமார், வர்த்தக பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்புகுழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago