Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, தனது 18 வயது மகனின் பெயரில், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியைக் கோரியதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், ஆனால் தாம் அதனை நிராகரித்ததாகவும் கூறினார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவில் பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் காணியை, நீண்டகால குத்தகை அடிப்படையில், தனது மகனுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி, 2016ஆம் ஆண்டு கோரியதாகவும் அந்தக் காணியைப் பெற்றுக்கொடுப்பதற்காக, மாவட்டச் செயலாளர் பணிமனையில் அனுமதிக்கப்பட்டு பட்டியலும் வந்ததாகவும் தெரிவித்தார்.
அதனை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் நிராகரித்து, அதை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க முடியாதென்பதை தெளிவாக உறுதியாகக் கூறியதாகவும், அவர் தெரிவித்தார்.
அந்தக் காணி நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியெனத் தெரிவித்த அவர். பொது மக்களுக்கு காணி இல்லையென. தாம் சண்டைப் பிடித்துக்கொண்டு இருக்கும் போது, அதை நீண்டகால குத்தகைக்கு எடுப்பதற்கு, சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பி, முயற்சித்தமையானது தவறெனவும் சுட்டிக்காட்டினார்.
அதிலும், சாந்தி சிறிஸ்கந்தராஜா எம்.பியின் மகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் நிலையில், அவருக்கு 18 வயதில் இருக்கும் போதே, பெரிய தொழிலை செய்வதற்காக என்று காரணம் காட்டி எடுக்க முயன்றது, பெரும் தவறாகுமெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம், தமிழரசுக் கட்சியின் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில், கட்சி விசாரணையை முன்னெடுக்குமெஎன நம்புவதாகவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago