Freelancer / 2022 ஜூலை 18 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து மகப்பேற்றிற்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும், பெண்கள் மகப்பேறின் பின்னர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு திரும்பிச் செல்வதற்கான வசதியினை முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மாங்குளம் வைத்தியசாலைக்கு மகப்பேற்றிற்காக செல்லும் பெண்கள் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவர்.
மகப்பேற்றின் பின்னர் பெண்கள் கைக் குழந்தைகளுடன் முக்சக்கர வண்டியிலோ பேருந்திலோ பயணிக்க முடியும். ஆனால் தற்போது கிளிநொச்சியில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியாதளவிற்கு பெருமளவு பணம் தேவைப்படுகின்றது.
பேருந்துகளிலோ பயணிகள் செறிவாக காணப்படுவதனால் மகப்பேற்றினை நிறைவு செய்த பெண்கள் சிசுவுடன் பேருந்துகளில் பயணிக்க முடியாது உள்ளது.
இந்நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து அடிக்கடி கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் செல்லும் அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மகப்பேற்றினை நிறைவு செய்த பெண்களையும் சிசுக்களையும் மாங்குளம் வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையினை முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எடுக்க வேண்டும் என மாங்குளம் பொது அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. (R)
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago