Freelancer / 2022 ஜூலை 06 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் கரடியின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எரிபொருள் பிரச்சனை காரணமாக கரடியை பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இரவு நேரங்களில் கரடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதாகவும், அதிகாலை நேரங்களில் மக்களை தாக்குவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட மீனவரை கரடி தாக்கிய நிலையில்,குறித்த நபர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் கரடியின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ள CCTV கெமராவில் பதிவாகி உள்ளது. (R)

22 minute ago
26 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
4 hours ago
9 hours ago