Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு நகரத்தில், மக்கள் வசிக்காத வீடுகள் பற்றைகள் வளர்ந்து காணப்படுவதன் காரணமாக, விஷஜந்துகளின் பெருக்கம் காணப்படுவதாக, பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் முல்லைத்தீவு நகரம் போர் காலத்திலும் சுனாமியினாலும் பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டின் பின்னர் மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது நகரத்தில் சில குடும்பங்கள் மீளக் குடியேறாமலும் புலம்பெயர்ந்து இருப்பதனாலும் பல வீடுகள் ஆட்கள் இல்லாத வீடுகளாக காணப்படுகின்றன.
இதன் காரணமாக அயலில் இருக்கின்ற குடும்பங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாக கிராம அலுவலர்களிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கிராம அலுவலர்கள் பிரதேச செயலாளருக்கு வழங்கிய தகவல்களையடுத்து, மக்கள் குடியேறாத வீடுகளைத் துப்பரவு செய்யும்படி வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், பலர் தமது வீடுகளையும் காணிகளையும் துப்புரவு செய்த நிலையிலும் இன்னும் பல வீடுகள் துப்பரவு செய்யப்படாததன் காரணமாக, நகர மத்தியில் பாம்புகள், பன்றிகளின் உறைவிடமாக வீடுகள் காணப்படுவதாக, பொது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago