2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மணல் அகழ்வதற்கான தடை மேலும் நீடிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில், மணல் அகழ்வதற்கான தடை, செப்டெம்பர் 03ஆம் திகதி வரையும்  மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது.

கௌதாரிமுனைப் பகுதியில், மணல் அகழ்வு தொடர்ந்த நிலையில், ஜூலை மாத  முற்பகுதியில், பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் அமையின்மை ஏற்பட்டது.

இதையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில்,  பூநகரி பொலிஸார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த மணல் அகழ்வுக்கு, ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை  தடை விதிக்கப்பட்டிருந்தது,

இந்நிலையில், குறித்த வழக்கு, நேற்று (06) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மணல் அகழ்வதற்கான தடையை, செப்டெம்பர் 03ஆம் திகதி வரை  மேலும்  நீடித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .