2025 மே 22, வியாழக்கிழமை

’மணல் அகழ்வுகள் தடுத்துநிறுத்தப்பட வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தையும், பூநகரி பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற சமூகமட்ட அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் ஏகோபித்த கோரிக்கைக்கு அமைவாக, சரியான திட்டமிடல் அடிப்படையில், மணல் அகழ்வுக்கான பொறிமுறை உருவாக்கப்படும் வரை மணல்  அகழ்வுகள் தடுத்துநிறுத்தப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
           
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கௌதாரிமுனைப் பிரதேசத்தின் இயற்கை வளத்தை அழிக்கும் வகையில் இயற்கையாகவே குவிகின்ற மணல் பெருமளவில் அகழ்வு செய்யப்படுகின்றது.

இதனால், மாவட்டத்தில் பெருவளம் அழிக்கப்படுவதுடன், இந்தப் பிரதேசத்துக்கான 18 கிலோமீற்றர் நீளமான வீதி மக்கள் பயன்படுத்தமுடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால், இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் மாவட்டத்தில் பல்வேறு மட்டங்களில் பேசப்பட்டாலும் இதற்கான தீர்வு என்பது  இதுவரை கிடைக்கப்பெறவிலலை.

இது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான சிவஞானம் சிறிதரனிடம் கேட்டபோது, பல்வேறு மட்டங்களிலும் அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றேன்.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத்திலும் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றையும் முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரேயொரு இயற்கை வளமான பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கௌதாரிமுனை மண், கடந்த காலங்களில் மிகக் கவனமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

யுத்தத்தின் பின் அப்போதைய அரசாங்கத்தின் ஒத்தூதிகளாக இருந்த பலரால் இப்பகுதி மண் களவாடப்பட்டு, வெளிமாவட்டங்களுக்குகொண்டு சென்றுவிற்பனை செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தையும் பூநகரி பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகமட்ட அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஏகோபித்த கோரிக்கைக்கு அமைவாக சரியான திட்டமிடல் அடிப்படையில் மணல் அகழ்வுக்கான பொறிமுறை உருவாக்கப்படும் வரை மண் அகழ்வுதடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் 2016.02.27ஆம் திகதி, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், 2016.09.03,2018.09.05ஆம் திகதி, பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானங்களை மீறி கடந்த இரு வாரங்களுக்கு மேலாக யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரனால், கொழும்பில் உள்ள கனியவளங்கள் திணைக்களத்தின் நேரடி, அனுமதியின் பிரகாரம் இப்பகல் மணற்கொள்ளை அரங்கேற்றப்பட்டுவருதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X