2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மணல் ஏற்றியவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில், நேற்று (06) இரவு 7.30 மணியளவில், டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றி கொண்டிருந்தவர்கள் மீது இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன்,  சாரதி  மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்

இந்நிலையில் இன்று காலை சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற மாங்குளம் பொலிஸார், சம்பவ இடத்தை பார்வையிட்டு  அங்கு 15க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளை   மீட்டுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த நபரான பளை - சோரான்பற்று பகுதியைச்  சேர்ந்த 30 வயதுடைய பேரம்பலம் கமலேஸ்வரன் என்பவர், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுவரை, சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரை மாங்குளம் பொலிஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .