2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மணல் கடத்தலை தடுத்த இளைஞர் மீது தாக்குதல்

Freelancer   / 2022 நவம்பர் 30 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.தில்லைநாதன்

சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி, மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட
அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவர் மணல் அகழ்வு கும்பலால் தாக்குதலுக்கு
உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலிக்கண்டி, குடத்தனை மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய பவானந்தராசா தரிசியன் என்ற
இளைஞரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை(28) இரவு 9 மணியளவில் வலிக்கண்டிப் பகுதியில் சட்டவிரோதமான
முறையில் வாகனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தது.

இரண்டாவது முறையாக மணல் அள்ளிச்செல்ல வந்த நிலையிலேயே கிராம இளைஞர்களால்
வாகன உரிமையாளர் பிடிக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகன உரிமையாளர், இளைஞர்கள்
சிலரும் இணைந்து, செவ்வாய்க்கிழமை(29) காலை 10 மணியளவில் வலிக்கண்டிப் பகுதிக்கு
சென்று இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அஞ்சுறுத்தலும் விடுத்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .