2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மண் பரிசோதனை ஆய்வுகூடம் திறந்து வைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

விவசாயிகளின் நன்மை கருதி, மண் பரிசோதனை ஆய்வு கூடம் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் மாகாண விவசாய அமைச்சின் ஊடாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையின் விரிவாக்கல் பிரிவால், வவுனியா பூங்கா வீதியில், மண் பரிசோதனை ஆய்வு கூடம் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது, வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் கலந்துகொண்ட ஆய்வுகூட நிலையத்தை திறந்துவைத்தார்.

விவசாயிகள் தமது விவசாய நிலங்களில் தேவையற்ற பசளை வகைகளை பயன்படுத்தாது இருப்பதற்கும் மண்ணின் தன்மையை மாற்றியமைக்காது இருப்பதற்காகவும் விவசாய நிலத்துக்கு தேவையான பசளையை கண்டறிந்து அதனை பயிரிட்டு அதிகளவான விளைச்சளை ஏற்படுத்துவதற்குமே, இந்த மண் பரிசோதனை ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இளைஞர் விவசாய கழகங்களுக்கு, விவசாய உபகரணங்கள் மற்றும் குரங்குகளை விரட்டுவதற்கு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், ஓய்வூதியகர்களுக்கு பழமரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரிவாக்கம்) ஏ. சகிலாபானு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா, ஆர். இந்திரராசா, நீர்ப்பாசன திணைக்கள பொறியிலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .