Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கரைச்சி மத்தியஸ்தர் சபை நிரந்தரமாக ஒரே இடத்தில் இயங்காமல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் இயங்குவதால் பிணக்குகளைத் தீர்க்க வருகின்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், கரைச்சி மத்தியஸ்தர் சபை செயற்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் பின்னர், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திலும் இயங்கிய மத்தியஸ்தர் சபை, மீண்டும் தற்போது கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இயங்கி வருகிறது.
இந்த மாதத்துடன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் செயற்படுவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்புத் தெரிவித்த நிலையில், தற்காலிகமாக கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள ஆனந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்தியஸ்தர் சபை ஒவ்வொரு இடங்களிலும் மாறி மாறி செயற்படுவது பொது மக்களை பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
33 minute ago