2025 மே 05, திங்கட்கிழமை

மதகுரு மீது பொலிஸ் தாக்குதல்; மக்கள் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஜூலை 19 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றையதினம் மதகுரு ஒருவரை பொலிஸ் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் இந்த செயலை கண்டித்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. 

இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட மதகுருவிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X