Freelancer / 2022 டிசெம்பர் 07 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், “குறித்த பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இணைந்து வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு கல்லடி பாலத்திலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.
அதேபோன்று வடக்கிலே அனைத்து மாவட்டங்களையும், உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலிலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடைகின்றது.
இப்பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசியத்தினை நேசிக்கும் அரசியல்கட்சிகள், பல்கலைக்கழ மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலகர்கள், கலந்துகொண்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்
33 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago