2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மன்னாரில் இருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 26 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதான பாலத்தில் வைத்து, கேரள கஞ்சா பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவரை, நேற்று (25) இரவு, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, நேற்று இரவு மன்னார் பிரதான பாலத்தின் ஊடாக வந்த ஹயஸ் ரக வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட போதே, சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதி மீட்கப்பட்டது.

இதன் போது, குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள், கேரள கஞ்சா பொதி மற்றும் வாகனம் என்பவற்றுடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .