2025 மே 15, வியாழக்கிழமை

மன்னாரில் இளம் பெண் கொலை: பெண்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் உப்பளம் பகுதியில், ஓகஸ்ட் 13ஆம் திகதியன்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  இரண்டு பெண்களையும், செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான், மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்று  (23) மாலை உத்தரவிட்டார்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட இரு பெண்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, குறித்த கொலைக்கும்  குறித்த பெண்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு என குறித்த பெண்ணின் தாய் மாமனிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு, இந்த இரு பெண்களும் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும் பாதிக்கப்பட்ட யுவதி சர்பாக மன்றில் முன்னிலையான  சட்டத்தரணி சர்மிலன் டயஸ், “குறித்த யுவதி  திட்டமிடப்பட்டு  மேற்கொள்ளப்பட்ட கொலை. இறந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இக்கொலை இடம் பெற்றது. இரு பெண்களும் பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

“எனவே இக்கொலையின் பிரதான சந்தேக நபரான அப்பெண்ணின் தாய் மாமனை கைது செய்வதற்கான அறிவுறுத்தலை பொலிஸாருக்கு வழங்க வேண்டும்இ அத்துடன், குறித்த இரு பெண்களையும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க வேண்டும்” என  மன்றில் தெரிவித்தார்.  

 

இரு தரப்பு வாத பிரதி வாதங்களின் பின்னர், பிரதான சந்தேக நபரான செட்டிகுளத்தை சேர்ந்த கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாய் மாமனை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதவான்,  இரு பெண்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை   விளக்கமறியளில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .