Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஒரு பிரச்சினையை பேசி தீர்ப்பதன் மூலம், இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மன்னாரிலே பல காலமாக விட்டுக் கொடுப்புக்களுடனும், பல்வேறு அர்ப்பனிப்புடனும் வாழ்ந்து வருகின்றோம் என, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று (28) காலை, மன்னாரில் உள்ள மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தரைத்த அவர், மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலினுடைய தோரண நுழைவாயில் அமைக்க மன்னார் பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டு பின் மீண்டும் அனுமதி தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பாக தாம் சில கருத்துகளை முன்வைத்துருப்பதாகவும் தெரிவித்தார்.
திருக்கேதீஸ்வர கோவிலின் அனுமதியானது பல்வேறு காலகட்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் எமக்கு 'தோரண நுழைவாயில்' அமைக்க மன்னார் பிரதேச சபையினால் உத்தியோக பூர்வமான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
கடிதம் வழங்கப்பட்டு ஒரு சில நாற்களில் குறித்த அனுமதி மீண்டும் இரத்துச் செய்யப்படுவதாக, மன்னார் பிரதேச சபையினுடைய தலைவரின் ஒப்பத்துடன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த செயற்பாடு இந்து மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குறித்த அனுமதியை உடன் இரத்துச் செய்யக்கோரி பிரதேச சபையின் தவிசாளருக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரையோகிக்கப் பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.
சமாதானம், சமாதானம் என்று நீண்ட நாற்கலாக நாங்கள் மன்னார் மண்ணில் இருந்து கொண்டு பல்வேறு பட்ட தரப்புக்கள் ஊடாக பேசிக் கொண்டிருக்கின்றோம்.
பல நல்லிணக்க செயற்பாடுகன் ஊடாக சென்று கொண்டிருக்கின்றோம். ஆனால், நல்லிணக்க செயற்பாடுகளினூடாக இந்து மக்களுக்கு மன்னாரிலே எந்தவிதமான நல்லிணக்கமும் ஏற்படவில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை.
திருக்கேதீஸ்வர கோவிலுடைய தோரண நுழைவாயில் உடைப்பு சம்பந்தமாக ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை சர்வமத பேரவையில் இருந்தும், சர்வமத செயற்பாடுகளில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்திருந்தோம்.
ஆனால், நாட்டிலே ஏற்பட்ட திடீர் அனர்த்த செயற்பாட்டின் காரணமாக சில சமூகங்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய நிலையிலே நாங்கள் சில சந்தர்ப்பங்களிலே இணைந்திருந்தோம்.
ஆனால், எங்களுடைய பிரச்சினைகளுக்கு யாரும் முன் வருவதற்கு தயார் இல்லை. ஏன் சர்வமத பேரவை கூட இந்த விடையத்தில் அக்கரை இன்றி செயற்படுகின்றமையை நாங்கள் உணர்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago