Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 08 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் கச்சான் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மெசிடோ நிறுவனம் வைற்றல் திட்ட நிதி அனுசரனையுடன், 30 குடும்பங்களுக்கு விதை கச்சான் 20 கிலோகிராம் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரப்புக்கடந்தான் மேற்கு கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கும் கச்சான் செய்கையை மேற்கொள்ள 20 கிலோகிராம் விதை கச்சான் வழங்கப்பட்டது.
குறித்த பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த பத்மினி என்ற பெண், கச்சான் பயிரிட்டு, தற்போது கச்சான் அறுவடையை இன்று (08) மேற்கொண்டார்.
பத்மினி தெரிவிக்கையில், “மெசிடோ நிறுவனத்தால் கச்சான் உற்பத்தியை மேற்கொள்ள தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளில் ஒருவராக என்னையும் தெரிவுசெய்தனர். கச்சான் உற்பத்தியை மேற்கொள்ள 20 கிலோகிராம் விதை கச்சான் எனக்கு வழங்கப்பட்டது.
“என்னிடம் உள்ள காணியில் எனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க அரை ஏக்கர் காணியில் கச்சான் பயிரிட்டேன். தற்போது மூன்று மாத முடிவில் கச்சான் அறுவடை செய்யும் நிலையில் உள்ளேன். தற்போது அறுவடை ஆரம்பித்துள்ளேன்.
“சுமார் 200 கிலோகிராம் கச்சான் எதிர்பார்த்துள்ளேன். இதன்மூலம் எனது செலவினங்கள் போக சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இலாபமாக எதிர் பார்த்துள்ளேன். எனது வாழ்வாதாரத்தை உயர்த்தி, பிள்ளைகளின் கல்வி செலவையும் ஈடு செய்ய எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.
மன்னார் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மன்னார் மாவட்டத்தில் மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மெசிடோ நிறுவனம் தற்போது பல்வேறு சுய தொழில் உற்பத்தி வழங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான பணியாளர்கள் இணைந்து மாவட்டத்தில் பல்வேறு வாழ்வாதார உதவி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (N)
48 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
5 hours ago