2025 மே 15, வியாழக்கிழமை

மன்னாரில் ரஷ்யா நாட்டு பிரஜை கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரஷ்யா நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தலைமன்னார் கடற்படையினரால் இவர் கைதுசெய்யப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்று (10) ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர், நேற்று (10) மாலை, மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில், ரஷ்யா  பிரஜையை ஆஜர்படுத்திய போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும்,  குறித்த ரஷ்யா பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் தலைமன்னார் பொலிஸாரின் பாதுகாப்பில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

இவரது, பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர், மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .