Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 1 இலட்சம் வேலைவாய்ப்பு வழங்குதல் தொடர்பாகவும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் முடிவுகளை மேற்கொள்ளும் விசேட கலந்துரையாடலொன்று, நேற்று (10) காலை 11 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில், மாவட்ட மேலதிகச் செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, 1 இலட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கும் திட்டத்தின் மேற்பார்வை குழுவின் அங்கத்தவர்களும் அதற்கான பொறுப்பு அதிகாரி மெஜர் மொகான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அதன் அடிப்படையில், 1 இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்படவுள்ள 1,830 பேருக்கான பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கான மேலதிக தகமைகளை வலுப்படுத்தல் தொடர்பாக, வருகை தந்த அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026