2025 மே 21, புதன்கிழமை

மன்னாரில் விசேட செயலமர்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடளாவிய ரீதியில் போஷாக்கை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை உருவாக்குதல் தொடர்பான செயலமர்வொன்று, மன்னார் மாவட்டச் செயலகத்தில், மன்னார் மாவட்டச் செயலாளர் தலைமையில், இன்று (05) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகம், போஷாக்கை மேம்படுத்துவதற்கான மக்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில், UNOPS, வேள்ட் விசன் அமைப்புகளின் நிதியுதவியுடன், நாடளாவிய ரீதியில், 2018 தொடக்கம் 2025ஆம்  ஆண்டு காலப்பகுதிகளுக்கான செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் ஊடாக நாடளாவிய ரீதியில் மந்த போஷாக்கு மட்டத்தை குறைத்து, போஷாக்கு மட்டத்தை அதிகரிக்கும் முகமாக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த செயற்றிட்டம் தொடர்பில், மன்னார் மாவட்ட மக்களுக்கு தௌிவூட்டும் முகமாகவே,  குறித்த செயலமர்வு நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில், மன்னார் மாவட்ட மேலதிகச் செயலாளர் எஸ்.குணபாலன், பிரதேச செயளாலர்கள், வலயக் கல்வி, கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்ட ரீதியாக போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் செயற்படும் அமைப்புகளின் ஆலோசனைகளும் பெறப்பட்டன..

குறித்த ஆலோசனைகளை உள்ளடக்கிய செயற்றிட்டமொன்று உருவாக்கப்பட்டு, நாடளாவிய ரீதியில் அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .