2025 மே 19, திங்கட்கிழமை

மன்னாரில் விழிப்புணர்வு கருத்தமர்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையுடன், “நீதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்குரிமையை பயன்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாடு செய்த விழிப்புணர்வுக் கருத்தமர்வு, மன்னார் நகர மண்டபத்தில், இன்று (13) முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் நடைற்ற குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வில், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டத்துறை சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி என்.எம்.ஹக்கீம் வாக்குரிமை தொடர்பாக விளக்கமளித்தார்.

இதில், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X