2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னார் சுத்திகரிப்புப் பணியாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் நகரசபையின் சுத்திகரிப்புப் பணியாளர்கள், சாரதிகள் உட்பட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள், இன்று (01) காலை, மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் நகரசபையின் கீழ் சுத்திகரிப்ப் பணியில் ஈடுபடும் 44 ஊழியர்களுக்கு, 2003ஆம் ஆண்டில், மன்னார் - ஜீவபுரம் பகுதியில் காணி வழங்கப்பட்டன. இருப்பினும், இதுவரையில் அந்தக் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களோ வீட்டுத்திட்டமோ, அடிப்படை வசதிகளோ செய்துகொடுக்கப்படவில்லை என்றும், இந்தக் காணி விடயத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறியே, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனவே, தங்களது நிலையைக் கவனத்திற்கொண்டு, தங்களுக்கான காணி உறுதி பத்திரங்களை உடன் வழங்க வேண்டும் என்றும் காணிக்காகப் புதிதாக விண்ணப்பித்துள்ள 15 சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் காணிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .