Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், இன்று காலை 10 மணியளவில், மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்ராஸ் ஏற்பாட்டில் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, வீதி, போக்குவரத்து, மீன்பிடி, விவசாயம், சுகாதாரம், வீட்டுத்திட்டம் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் அகழ்வு செய்யப்படுகின்ற மண் வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிக விலைக்கு விற்றல், சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது, அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் சட்டவிரோத மண் அகழ்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கே மண் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒரு சிலர் இலாபம் அடைவதாகவும், மக்கள் பாதிப்படைவதாகவும் குறித்த கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
எனவே, மன்னார் மாவட்டத்தில் மண்ணுக்கு நிர்ணய விலை ஒன்றை தீர்மாணிக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில், பல காணிகளை வன வள பாதுகாப்பு திணைக்களம் தன் வசப்படுத்தி வைத்துள்ளமையால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதோடு, வீட்டுத்திட்டமும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், கடற்படை,பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு, தமது கருத்துகளை முன் வைத்தனர்.
இதில், வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கலந்துகொள்ளவில்லை.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 104 பட்டதாரிகளுக்கான பயிலுனர் நியமனம் இன்று மாவட்டச் செயலகத்தில் வைத்துவழங்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago