Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 ஒக்டோபர் 01 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு, தன்னை விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதும், கொழும்புக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் மன்னார் வந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு, நேற்று (30) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
“எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை, கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வருகை தருமாறு, 21.09.2017 திகதியிடப்பட்ட கடிதம் 27.09.2017 அன்று எனக்கு கிடைக்கப் பெற்றது.
நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய அளவில், தற்போது எனது உடல் நிலை சீரின்மையால் குறித்த திகதியில் வருகை தர முடியவில்லை என்பதை தங்களுக்கு அறியத்தருவதுடன் அவசரமாக எனது வாக்கு மூலம் தேவையெனில், மன்னார் பொலிஸ் நிலையமூடாக ஏற்பாடு செய்தால் வழங்
நான் அறம் சார்ந்த வெளிப்படைத்தன்மையுள்ள சமூக செயற்பாட்டாளன் என்பதால, தங்கள் அழைப்பைக் கண்டு அச்சப்பட்டுக் கொள்ளவில்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago