Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களின் எல்லையில் காணப்படும் மயான பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு கோரி, வட்டுவாகல் மக்கள் இன்று (21) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மயானத்தில், கடந்த 13ஆம் திகதி, பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து மதில் அமைக்க முற்பட்டபோது, செல்வபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் அதனைத்தடுத்து, அதிகாரிகளுடன் முரண்பட்டிருந்தார். இதனையடுத்து, அவர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று (21) மாவட்டச் செயலகம் முன்பாக ஒன்றுகூடிய மக்கள், குறித்த மதிலை அமைத்து எல்லையிட்டு, இந்தப் பிணக்கை தீர்க்குமாறும் தமக்கான மயானத்தை தம்மிடம் மீட்டுத்தருமாறும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களைச் சந்தித்த மாவட்டச் செயலரிடம் தமது கோரிக்கைகளில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பிணக்குடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் இரண்டு கிராம மக்களையும் அழைத்து கலந்துரையாடி ஒரு சுமூகமான தீர்வினை காண நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago