Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்
நோயாளர்களுக்கு மருந்து சுற்றிக்கொடுக்கும் காகிதாதிகளுக்கு மேல், நாயொன்று படுத்திருந்ததால், பொதுமக்களுக்கும் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்ட சம்வமொன்று, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில், நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
காரைநகர் பிரதேச வைத்தியசாலையில், சுகாதார நடைமுறைகள் முதல் நோயாளர்களுக்கான பொதுஒழுங்கு வரை பல்வேறு குறைபாடுகள் நிலவி வருகின்றன. இது தொடர்பில் பல முறை சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு, வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை இதுவரை எவ்வித நடவக்கையையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், நோயாளர்களுக்கு மருந்துகள் சுற்றிக்கொடுக்கும் காகிதாதிகள் அடங்கிய பொதிகள், பாதுகாப்பற்ற அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள அந்தக் காகிதாதிகளுக்கு, நேற்று முன்தினம் நாயொன்று படுத்திருந்ததை அவதானித்த பொதுமக்கள், வைத்தியசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
18 May 2025