2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’மாவட்டங்கள் தோறும் முகவர்கள் களமிறக்கப்படுகின்றனர்’

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

6. எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களைக் களமிறக்கப்படுவதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், சமூக வாக்குகளைச் சிதைத்து சின்னா பின்னமாக்கி, அதன் மூலம், தமது குறிக்கோளை அடையும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

முசலியில், நேற்று (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இவ்வாறு களமிறக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என துல்லியமாகத் தெரிந்த போதும், இந்தக் களப்பரீட்சையில் அவர்கள் இறக்கப்டுவதாகவும், இதற்கு காரணம், சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி எவ்வாறாவது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டால், தாங்கள் விரும்பியபடி அரசாங்கத்தை கொண்டு செல்லலாம் என்பதேயாகுமெனவும் கூறினார்.

தற்போது தேர்தல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள்  இந்தப் பிரதேசத்துக்கு தலைகாட்டத் தொடங்கியுள்ளனரெனத் தெரிவித்த அவர், தாங்கள் வெற்றிபெறப் போவதில்லை என தெளிவாகத் தெரிந்திருந்தும், வன்னி மாவட்டத்தில் எம்.பியாக இருக்கும் தன்னை இல்லாமலாக்குவதே அவர்களின் பிரதான இலக்காகுமெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .