2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மீனவக் கிராம உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் ஊடாக நந்திக்கடல் கடற்றொழிலாளர்களின் கிராம உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு, 7.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, நந்திக்கடல் நீர் ஏரியை நம்பி கடற்றொழில் செய்யும் மீனவ அமைப்புகளின் கிராமங்களில் பாதை, பாலம் உள்ளிட்ட உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே, இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கரைதுறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட திட்டமிடல் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அந்தத் திட்டமிடல் குழுவின் ஊடாக வட்டுவாகல் மீனவக் குடும்பங்கள் வாழ்கின்ற கிராமத்தின் அபிவிருத்திக்கு, பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .