2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழப்பு

சண்முகம் தவசீலன்   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள குமரிக் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் மர்மமான நிலையில் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக குறித்த குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் நேற்றைய தினமும் (7) மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

எனினும் குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரின் உடல் குறித்த குளத்தில் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செல்வபுரத்தைச் சேர்ந்த தம்பிராசா சுரேஷ்வரன் (வயது 35) என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .