சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநெச்சி மாவட்டத்தில், தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்குமாறு 741வரையான குடும்பங்களைச் சேர்ந்த, 2,422 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக, மாவட்ட செயலகப் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரவுகளிலும் 43, 905 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள நிலையிலேயே, மேற்படி நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் மீள்குடியேறுவதற்காக 741 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன.
அதாவது, கரைச்சிப் பிரதேசத்தில் 130 குடும்பங்களும் கண்டாவளைப் பிரதேசத்தில் 21 குடும்பங்களும் பூநகரிப் பிரதேசத்தில், 357 குடும்பங்களும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 233 குடும்பங்களும் என 741குடும்பங்களைச் சேர்ந்த 2,422 பேர் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக.பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட இரணைதீவு விடுவிக்கப்படாமை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில், வெடிபொருள் அகற்றுவதில் உள்ள தாமதம் என்பவற்றால் அதிகளவான குடும்பங்களும் படையினர் வசமுள்ள காணிகளால், குறிப்பிட்ட சில குடும்பங்களும் மீள்குடியேறமுடியாத நிலை காணப்படுகின்றது.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago