Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 22 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில், மனித எச்சங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, துப்பாக்கி என்பனவும், கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால், இன்று (22) மீட்கப்பட்டுள்ளன.
2008 இறுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதியாக காணப்பட்ட பிரதேசத்திலேயே, இவை காணப்பட்டுள்ளன.
கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதே, பணியாளர்கள் இவற்றை அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அவர்கள் பளை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கியதனையடுத்து, பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
இதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சரவணபவராஜா, முகமாலை பகுதிக்குச் சென்று, மனித எச்சங்களையும் ஏனைய பொருள்களையும் பார்வையிட்டதுடன், மே 26ஆம் திகதி அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
16 May 2025