Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 08 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில், நேற்று (07) இரவு 11 மணியளவில், வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுக் குழுவினர் மேற்கொண்ட அட்டகாசத்தில், ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த நபர், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், வீட்டில் இருந்த இன்னொரு நபருக்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டு உடமைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, இது தொடர்பாக விரைந்து செயற்பட்ட முகமாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago