2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘முதுகெலும்பு இல்லாத தலைமைகள் சொல்வதை நம்பவேண்டாம்’

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

“நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்  முதுகெலுப்பு இல்லாத தலைமைகள் சொல்வதை மக்கள் நம்ப வேண்டாம்” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில், நேற்று டெலோ கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ் மக்களின் எந்த நோகத்துக்காக ஆயுதங்கள் ஏந்தினோமோ அந்த நோக்கத்துக்காக ஆயதங்கள் இல்லா நிலையிலும் தொடர்ச்சியாக செய்துவருகின்ற அரசியல் ரீதியாக தாங்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றோம் என்றார்.

“கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இந்த அரசாங்கத்துக்கு சோலைபோய், தனது சுயநலன்களை கருத்தில்கொண்டு செயற்பட்டார்கள் என்ற விமர்சனத்தை இன்று தமிழ் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு நிற்பவர்கள் பிரசாரத்தை செய்வது மிக கவலை தருகின்றது. கூட்டமைப்பு ஒருக்காலும் அரசாங்கத்துக்கு துணைபோகாது. மக்களை அடமானம் வைத்து செயற்படாது” எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .