2025 மே 21, புதன்கிழமை

முருகானந்தா வித்தியாலயத்துக்கு சிறுவர் பூங்கா

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்துக்கான சிறுவர் பூங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சிபாரிசுக்கு அமைவாக, 0.5 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை, கடந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பாடசாலையாக காணப்படுவதுடன், பல்வேறுபட்ட தேவைகளைக் கொண்ட பாடசாலையாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில், முருகானந்தா ஆரம்ப பாடசாலையில் அதிபர் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனி்டம் முன்வைத்த கோரிக்கைக்கு அவைமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சிபாரிசுக்கு அமைவாக, மேற்படி பாடசாலைக்கான சிறுவர் பூங்கா அமைப்பதற்கென கம்பரெலிய திட்டத்தின் 0.5 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன், பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .