2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முறிகண்டியில் யானை அட்டகாசம்

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதிக்குள் நுழைந்துள்ள காட்டு யானையொன்று, அங்கிருந்த பயன்தரு தென்னை மற்றும் வாழை மரங்களைச் சேதமாக்கியுள்ளது.

புதன்கிழ​மை (19) இரவு அப்பகுதிக்குள் புகுந்துள்ள யானையை, நீண்ட நேர முயற்சியின் பின் விரட்டியடித்ததாகத் தெரிவிக்கும் பிரதேசவாசிகள், யானையின் அட்டகாசத்தால், வீ்ட்டுத் தோட்டமொன்றில் நடப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் அழிக்கப்பட்டுள்ளதோடு, வாழைமரங்களும் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளன என்றனர்.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள குளங்களின் நீர் வற்றியுள்ள நிலையில், விவசாயத்தைக் கைவிடப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X