Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று, மணலாறு ஆகிய 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில், 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 03 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 05 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மணலாறு பிரதேச செயலக பிரிவில் 02 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 05 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 04 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து 6 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன் படி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிவராசா சிவறஞ்சன் 304 வாக்குகளாலும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் தெய்வேந்திரம் திருநீபன் 215 வாக்குகளாலும், ஒட்டுசுட்டான் நமசிவாயம் டிலக்சன் 285 வாக்குகளாலும் துணுக்காய் கணேசலிங்கம் வினுஜன் 270 வாக்குகளாலும், மாந்தை கிழக்கு பத்மநாதன் சயந்தன் 199 வாக்குகளாலும், வெலிஓயா பிரதேசத்தில் கீன்கென்ட முடியா செலகே 127 வாக்குகளாலும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago