Freelancer / 2022 ஜூலை 16 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெண்ணையினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலக்கு அமைய முள்ளியவளை 4ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனை செய்தவேளை, 4 பெரல்களில் பதுக்கி வைத்திருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணைய் 30 லீற்றர் என்பன நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. (R)
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago