Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு – உடையார்கட்டு, தேராவில் ஆகிய பகுதிகளில், நேற்றிரவு புகுந்த காட்டுயானைகள் பெருமளவான தென்னை மரங்களை அழித்துள்ளதுடன், பொதுமக்களையும் விரட்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு - தேராவில் ஆகிய பகுதிகளில், நேற்றிரவு (30) காடடுயானைகள் புகுந்து பெருமளவான பயிர்களை அழித்துள்ளன.
முக்கள்குடியிருப்புகளுக்குள் புகுந்த யானைகள் பயன்தரு நிலையில் இருந்த தென்னை மரங்களை அழித்துள்ளன.
இரவு புகுந்த யானைகளை, மக்கள் விரட்டியபோதும், மக்களை யானை விரட்டியதாகவும் இதனால் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயநிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தப் பிரதேசத்தில் யானைவேலிகளை அமைத்துத்தர தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .