2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முல்லைத்தீவில் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு

Editorial   / 2022 நவம்பர் 03 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார்.

உயிரிழந்த சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .