Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூலை 17 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரி கல்விக் கோட்டத்தில் மூடப்பட்டுள்ள 06 பாடசாலைகளை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சி.சிறிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
1990ஆம் ஆண்டிற்குப் பின்னர் பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்தமை, போர் நெருக்கடி, இடப் பெயர்வுகள் காரணமாக தற்போது வரை 06 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
2010ஆம் ஆண்டிற்குப் பின்னர் மீள் குடியேற்றத்துடன் இப்பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தற்போது பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள 24 பாடசாலைகளில் 06 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன.
பொன்னாவெளி சைவப் பிரகாச வித்தியாலயம், பல்லவராயன்கட்டு இந்து கலவன் பாடசாலை, தம்பிராய் அ.த.க.பாடசாலை, கௌதாரிமுனை அ.த.க.பாடசாலை, அத்தாய் முத்துக்குமாரசாமி வித்தியாலயம், செட்டியகுறிச்சி பாடசாலை என்பன தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன.
பூநகரியில் ஏற்பட்ட உவர்ப் பரம்பல் காரணமாக பொன்னாவெளி, பல்லவராயன் பாடசாலைகள் மூடப்பட்டன. ஏனைய பாடசாலைகள் போர், இடப்பெயர்வுகள் காரணமாக மூடப்பட்டுள்ளன.
இப்பாடசாலைகளை இயக்குவதற்கு போதியளவு மக்கள் தொகை கிராமங்களில் காணப்படவில்லை என்பதே கல்வி அதிகாரிகளின் கருத்தாக காணப்படுகின்றது. பூநகரி கல்விக் கோட்டத்திற்குள் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் பாடசாலைகளை இயக்கலாம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
கடந்த வாரம் தனியான கோட்டக் கல்வி அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025