Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 180 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு அத்தியாவசிய உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (06) ‘மெசிடோ’ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'வைற்றல்' நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தால் (மெசிடோ) இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், விசேட தேவைக்குரிய குடும்பங்கள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட அடிப்படை சட்ட உதவி தேவையுடைய 180 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டு குறித்த உலருணவு வழங்கப்பட்டது.
முதல் கட்ட பணிகள், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு, சவேரியார் புரம், காயாக்குளி, கரடிக்குளி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 33 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .