2025 மே 22, வியாழக்கிழமை

'மேய்ச்சல் தரவைகளை அமைக்கவும்'

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைக்க வேண்டிய தேவையிருப்பதாக,  கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கௌரிதிலகன் தெரிவித்தார்.

விவசாயத்தையும் கால்நடை, வளர்ப்பு மீன்பிடி என்பவற்றையும் பிரதான தொழிலாகக் கொண்டு மக்கள் வாழும் மாவட்டமாகக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இன்மையல் பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, காலபோகச்செய்கையின்  போது, முழுமையான விவசாய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில், கால்நடைகளை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு பயிர்ச் செய்கையின் போது, மேச்சல் தரவைகள் இன்றி குறுகிய நிலப்பரப்புகள், கால்நடைகளை பராமரித்தமையால் ஒருவித நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி, அதிகளவான கால்நடைகள் அழிந்து போனதாக, பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 

இதேவேளை, அதிகவான நிலங்களையும் வளப்பிரதேசங்களையும் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உதவிப் பணிப்பாளர், மாவட்டத்தில் உள்ளக வளர்ப்பு முறை, திறந்தவெளி வளர்ப்பு முறைகளில் பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.

இருந்தபோதும், பாரம்பரிய முறையிலான திறந்த வெளி வளர்ப்பு முறையிலேயே அதிகளவான பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர்.

இவ்வாறு மாவட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் திறந்தவெளி முறையிலேயே வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கான மேய்ச்சல் தரவை என்பது மிகப்பாரிய பிரச்சினையாகவுள்ளது.

இது தொடர்பில், நாங்களும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X