Freelancer / 2022 ஒக்டோபர் 17 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்
இலங்கை தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன்,கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டில் வந்திறங்கினர்.
தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் தீடை இலிருந்து இலங்கைத் தமிழர்களை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது. (R)
13 minute ago
17 minute ago
18 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
18 minute ago
31 minute ago