2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யானை தாக்கி ஒருவர் படுகாயம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கெப்பிற்றிக்கொல்லாவை பகுதியில், யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வேலைசெய்துகொண்டிருந்த போதே, அப்பகுதிக்கு வந்த காட்டுயானை, அவரைத் தாக்கியுள்ளது. 

இதனால் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு பதவியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தில் அப்துல் வகீட் என்ற 40 வயதுடைய நபரே இவ்வாறு படுகாயமடைந்தவர் ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .