2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’யானை வேலிகளை அமைப்பதற்கான முயற்சிகள் கிடப்பில் உள்ளன’

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், காட்டுயானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில் யானை வேலிகளை அமைப்பதற்கான முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தொடர்ந்தும் யானைத் தொல்லையை எதிர்கொள்வதாக, பிரதேச மக்கள் கவலை  தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், மாங்குளம், சின்னசாளம்பன், பெரிய சாளம்பன், முத்தையன்கட்டு, பேராறு உள்ளிட்ட கிராமங்கள் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தாக்கத்துக்குள்ளாகி வருகின்றது.

மேற்படி கிராமங்களில் காட்டுயானைகளால் தமது வாழ்வாதாரப் பயிர்கள் அழிக்கப்பட்டு வரும் அதேநேரம், உயிராபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சின்னசாளம்பன், பெரிய சாளம்பன் ஆகிய கிராமங்களில் கடந்த 2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில், யானை வேலிகளை அமைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டு, இன்று வரை அதன் பணிகள் முன்னெடுக்கப்படாது இடைநடுவில் கைவிடப்பட்டு காணப்படுகின்றது.

மேற்பகுதிகளில், சுமார் 33 கிலோமீற்றர் நீளமான யானை வேலிகளை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வனவளத் திணைக்களத்துக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் இடையேயான முரண்பாடுகள் காரணமாகவே, இதன் பணிகள் இடைநடுவில் விடப்பட்டுள்ளதாகவும் இதனை அமைப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .