2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ் - அம்பாறை நோக்கி வந்த அரச பேருந்தில் கொள்ளை

Freelancer   / 2022 ஜூலை 03 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில் 

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி வந்த  அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

மூவரும் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்குவதற்காக நடத்துனர் இடம் விட முற்பட்டபோது அவரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்த பணத்தினைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

 மேலும் அவர்கள் இறங்கிய இடத்தில் வேறு சிலரும் காத்திருந்ததாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .