2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Gavitha   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் யார் என இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.  

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வானுடன் மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் தலை வானின் கண்ணாடியில் மோதியதாலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .