Freelancer / 2022 ஜூலை 17 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானாட்டான் - வங்காலை கிராம மக்கள் நேற்று காலை சமையல் எரிவாயு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 900 லிட்ரோ சமையல் எரிவாயு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் வங்காலை கிராமத்திற்கு விநியோகிக்கப்படாமல் வேறு கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்காலை கிராமத்தில் உள்ள 4 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் வங்காலை பிரதான வீதியை மறித்து எரிவாயு சிலிண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது எதிர்வரும் புதன்கிழமை (20) சமையல் எரிவாயுவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில், மக்கள் அமைதியாக சென்றனர். (R)
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago