2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வசதிகளை மேம்படுத்துவதற்கு கூட்டத்தை நடத்த தயங்கும் அதிகாரிகள்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு - மாந்தைக் கிழக்கு, நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, துணுக்காய் வலயக் கல்விப் பணிமனை பாடசாலை மட்டத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு, துணுக்காய் வலயத்தில் இருந்து அதிகாரிகள் ஒருவரும் பாடசாலைக்கு வருவதற்கு தயக்கம்

பாடசாலை விடுமுறைக் காலம் என்பதால், கூட்டத்தை நடத்த முடியாதென, அதிகாரிகள் தட்டிக் கழித்து வந்தனர். பாடசாலைகள் தொடங்கிய ஒரு வாரம் கடந்த நிலையிலும் கூட்டத்தை நடத்துவதற்கு துணுக்காய் வலயத்தில் இருந்து அதிகாரிகள் ஒருவரும் பாடசாலைக்கு வருகை தரவில்லையென, பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், கூட்டங்களில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிறப்பான பதில்களை அளிக்கும் அதிகாரிகள், செயற்பாட்டளவில் சிறப்பாக இயங்குவதில்லையெனவும், பெற்றோர்கள் சாடியுள்ளனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .